புஷ்பவனம் ஐயா - பர்ஸண்டேஜ் கதை
கொஞ்ச நாள் பிரேக் விட்டிருந்த கி.அ.அ. (கிராமத்து அரட்டை அரசியல்) அனானி சமீபத்தில் ஒரு மேட்டரை மெயிலில் அனுப்பி இவ்வாறு எழுதியிருந்தார்:
*********************
எ.அ.பாலா,
நலம் தானே. சமீபத்தில் நண்பர் ஒருவர் வலைப்பதிவில் கதை ஒன்றை வாசித்தேன். அட, இவர் கதை கூட எழுதுவாரா என்று ஆச்சரியம். நல்ல கருத்துள்ள கதை, நம்மளும் ஒரு கதையை எழுதலாமேன்னு ஒரு உந்துதலைத் தந்த கதை அது ;-) படிச்சுப் பார்த்துட்டு, உங்களுக்கு விருப்பமிருந்தா பதிவாப் போடுங்க.
குறிப்பிட்ட பதிவுக்குப் போய் நான் எழுதுனதை பின்னூட்டமா போடலாமுன்னா, அங்க சுத்திக்கிட்டு இருக்கற பின்னூட்ட ஜால்ராக்கள் போடற கூச்சலில், நம்ம குரல் எடுபடுமான்னு ஒரு சந்தேகம், அம்புடுதேன் :)
கி.அ.அ.அனானி
பி.கு: எந்தப் பதிவை நான் குறிப்பிடுகிறேன் என்று முதலில் கண்டுபிடிப்பவரின் சொந்தக்காரப் புள்ளைக்கு பாலா 'பேமண்ட்' சீட் ஒன்றை தள்ளுபடி ரேட்டில் வாங்கித் தருவார் ;-)
***************************
கருத்துச் சுதந்திரத்தின் மேல் எனக்கிருக்கு அசைக்க முடியாத நம்பிக்கையாலும், "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற பரந்த நோக்கிலும் கி.அ.அ.அனானியின் வேண்டுகோளை நிறைவேற்றுகிறேன் :)
இப்பதிவுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு கி.அ.அ.அ. அவர்களையே பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் !!! கி.அ.அ.அ கதை பதிவாக கீழே !
எ.அ.பாலா
**********************
"அப்பா...நான் நல்ல மார்க் எடுத்து பாஸாயிட்டம்பா...இஞ்சினீரிங் காலேசுல சீட்டு, ஸ்காலர்ஷிப்பு அல்லாம் கெடைச்சுரும்பா..நான்தாம்பா ஸ்கூல் பஸ்ட்டு " என்றபடி வந்தான் சின்ராசு
மென்று கொண்டிருந்த வெற்றிலையை இடப்பக்கம் திரும்பி புளிச்சென்று துப்பி விட்டு " சரி..அதுலென்ன..ஒனக்குதான் பாஸ் பண்ணிப் போட்டாலே சீட்டு வாங்கிருவமுல்ல " என்று வெறுமனே சொன்னார், கூடத்தில் இருந்த பெரிய தேக்கு மர ஊஞ்சலில் உட்கார்ந்திருந்த பஞ்சாயத்து போர்டு பிரசிடென்டு புஷ்பவனம் ஐயா.
அப்பாவிடம் சிறிதளவேனும் பாராட்டை எதிர்பார்த்து வந்த சின்ராசுவின் முகம் கருத்தது.
தலையைக் குனிந்து கொண்டே வீட்டினுள் சென்றான்
பின்னால் கணக்கு ஆவுடையா பிள்ளை " என்னங்க பள்ளிக்கூடத்திலயே சாஸ்தி மார்க் தம்பிதான் வாங்கியிருக்குதாமுல்ல " என்று சொல்வது கேட்டதும் அப்பா என்ன பதில் சொல்லப் போகிறார் என்று கேட்கும் ஆவலில் சின்ராசுவின் நடை மட்டுப் பட்டது.
"மார்க் கெடக்குது களுதை...அதை வச்சுக்கிட்டு நாக்கா வளிக்க....அவனவன் 95 பர்ஸன்டு மார்க் வாங்கிட்டு இஞ்சினீரிங் சீட்டு கெடக்காம ...பேமண்டு சீட்டு வாங்க காசுமில்லாம வக்குமில்லாம பொளப்புக்காக கல்யாணம் கருமாதின்னு சடங்கு செஞ்சு வச்சு வயத்தை களுவிட்டிருக்கானுங்க...சுத்துப்பக்கத்துலே பார்க்குரீங்கல்ல...ஏன்..ஒம்ம பையன் கூடத்தான் போன வருசம் 96 பர்சண்டு மார்க்கு வாங்கி இதே ஸ்கூலுல மொதலாவதா வந்து மெடலு வாங்கினான்...இப்ப என்ன கிளிக்காங்குறேன்...மேல காலேஜு சீட்டு கெடைக்காம தீப்பட்டி ஆபிஸ¤ல 500 ரூவா சம்பளத்துக்கு கணக்குதான எளுதிக்கிட்டு இருக்கான்..டெய்லி தீப்பட்டி ஆபீஸ¤க்கு கணக்கெளுதப் போகும் போது வாங்குன மெடலை களுத்துல மாட்டிக்கிட்டு போறானா ? என்று இதழோரம் நையாண்டிப் புன்னகையுடன் கேட்டார்.
" இஞ்சினியரிங் காலேஜுல சேர இப்பத் தேவை "இந்த" பர்ஸண்டேஜும்..மெடலும் இல்ல... ..அதைப் புரிஞ்சுக்கோரும்.."என்றார் மீண்டும் புகையிலையை சாவகாசமாக வாயிலிட்டு அதக்கிய படி.
கேட்டுக் கொண்டிருந்த ஆவுடையா பிள்ளை மெளனமாய் தலையை குனிந்து கணக்கெழுதத் தொடங்கினார்.
*** 292 ***
8 மறுமொழிகள்:
As usual, my comment will be the first comment for this posting :)))
கிராமத்து அனானி சொல்வதில் பாயிண்டு இருக்கிறது. ஆனால் ஒரு சம்சயம். இப்போதெல்லாம் யாருக்குமே மெரிட் கம் மீன்ஸ் உதவித் தொகை கிடைப்பதில்லையா?
நான் சமீபத்தில் 1963-ல் கிண்டி பொறியியல் கல்லூரியில் சேர்ந்தபோது ஒரு டெர்ம் ஃபீஸ் கட்டணம் 150 ரூபாய் என்னும் அளவில் ஒரு கல்வியாண்டுக்கு 450 ரூபாய் ஆகும். எஸ்.சி./எஸ்.டி. களுக்கு முழுவதும் இலவசம். மேலும் 450 ரூபாய் ஆண்டுதோறும் கிடைக்கும்.
அது இல்லாத மற்ற வகுப்பினருக்கு மாத சம்பளம் ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் இருந்து, பி.யூ.சி.முதல் வகுப்பில் தேறியிருந்தால் மேலே சொன்னது போல 900 ரூபாய் கிடைக்கும். ஆனால் ஏதாவது வகுப்பில் கம்பார்ட்மெண்ட் வாங்கினால் அது மற்ற வகுப்பினருக்கு நிறுத்தப்படும். எஸ்.சி. எஸ்.டிக்களுக்கு இல்லை. பின்னவர்கள் பணக்காரராக இருந்தாலும் இதே சலுகைதான்.
இப்போது நிலைமை என்ன?
அன்புடன்,
டோண்டு ராகவன்
எ,அ.பாலா
பதிப்பித்தமைக்கு நன்றி...அப்புறம் போன முறை சரியான விடை சொன்னவர்களை கச்சேரிக்கு அழைத்து போனிர்களா இல்லையா ?
::))))))))
கி.அ.அ.அனானி
ராகவன் சார்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இப்போது என்ன் நிலமை என்று நான் அறியேன் !
என்ன, பரிசு அறிவித்திருந்தும், உங்களாலேயே "குறிப்பிட்ட" பதிவரை கண்டுபிடிக்க முடியவில்லையே ;-)
எ.அ.பாலா
கி.அ.அ.அனானி,
வாங்க !
//அப்புறம் போன முறை சரியான விடை சொன்னவர்களை கச்சேரிக்கு அழைத்து போனிர்களா இல்லையா ?
//
துளசி, கால்கரி சிவா போன்றவர்கள், சீசன் டிக்கட்டோடு பிளேன் டிக்கட்டும் அல்லவா கேட்டர்கள் :)))
யார் என்று தெரியாமல் என்ன?
அன்புடன்,
டோண்டு ராகவன்
கி அ அனானி,
போட்டீங்களே ஒரு போடு! ஆனா, ரெடிமேட் ரிப்ளை தயாரா இருக்கு. வேணுமா?
கி அ அ வின் ஊடக வன்முறை ஆச்சரியமளிக்கிறது. கீழே காணும் புள்ளிவிவரங்களை பலமுறை என் பதிவில் பதிந்துவிட்டபின்னும்கூட அதை ஆதாரமாக ஏற்காததே அவர் எந்தக்கலர் கண்ணாடி போட்டிருக்கிறார் என்பதையும், எப்படிக்கண்ணீர் வடிக்கிறார் என்றும் தெரியவைத்துவிட்டது.
YEAR OBC MBC SC ST FC OTH
1000BC 2 3 4 5 6 7.26
1025BC 4 5 6 7 8 9.34
1ற்கும் 3ற்கும் இடையே 33% இடைவெளி உள்ளதே எங்கே போனது என்பதை இங்கே, இங்கே இங்கே இங்கே படித்து தெரிந்துகொள்ளலாம்!
இங்கே என்பதெல்லாம் லிங்க்கு !
ஒரு தூரதேசத்து அனானி:-)
//கி அ அ வின் ஊடக வன்முறை ஆச்சரியமளிக்கிறது. கீழே காணும் புள்ளிவிவரங்களை பலமுறை என் பதிவில் பதிந்துவிட்டபின்னும்கூட அதை ஆதாரமாக ஏற்காததே அவர் எந்தக்கலர் கண்ணாடி போட்டிருக்கிறார் என்பதையும், எப்படிக்கண்ணீர் வடிக்கிறார் என்றும் தெரியவைத்துவிட்டது.
//
ithu SUPER ;-)
//ஒரு தூரதேசத்து அனானி:-)
//
entha Ur sAmi nIngka ? :)))
thanks for your comment !
//யார் என்று தெரியாமல் என்ன?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
Pl. come out with the NAME to claim the prize ;-)
Post a Comment